திகட்டாத அருவி

எழுதி எழுதி தீர்த்தான்பேசுவதை குறைத்தான்சாப்பிட மறந்தான்எழுத்துக்களும் வார்த்தைகளும்அவனுள் ஜலமாய்ஊர்ந்துகொண்டிருந்ததுஎதற்கு இத்தனை வாதைஅந்த ஒரு வார்த்தைக்காகஅவன் எழுதிய அந்தகடைசி வார்த்தைக்காகஒரு புள்ளி வைப்பான்அந்த புள்ளிக்காக.

அறை

இந்த குகையேஎன்னோடது தானாம்வைத்துக்கொண்டேதெரியாமல் போனதுஅறிந்துகொள்ளாமல்இருப்பது என் எண்ணம்அல்லஅந்த குகையைமிக ஆழ்ந்துபார்த்தவர்கள் எல்லோரும்பிறழ்ந்து போனார்களாம்நானும் பிறழ்ந்துபோவேனோ ஆனாலும் குகைஅட்டை கருப்புஊமை கோட்டான்களேஅதிகம் இருந்ததுஎத்தனை எத்தனைஅறைகள்எவ்வளவு வண்ணங்கள்பெரும்பாலும் சிவப்பின்தோற்ற மயக்கங்களே ஒரு அறைக்குமூப்பு தட்டியிருந்தது ஒரு அறைக்குபெயர்…

வெளி

எல்லாவற்றையும் உதறித்தள்ளுங்கள்என்னையும்என் வார்த்தைகளையும்நினைவுகளையும்வாசனையையும்நிகழ்வுகளையும்…நான் விடுதலைஆகி இருப்பேன்அதனாலேயேநீங்களும் விடுதலைஆகி இருப்பீர்கள்ஒருவரை ஒருவர்ஈர்த்துக்கொண்டுவாழ்ந்துகொள்ளநீங்களும் நானும்என்னகாந்தப்புலமா?வெறும் காற்றடைத்தஇதயப்பெட்டி கொண்டஇரு விலங்குகள்

ஒரே வார்த்தை

எழுது எழுது என்றதுஎதை எழுதுவதுஅதைத்தான் என்றதுசரி என்றுகவி எழுதினேன்ஒரே வார்த்தையில்முடிந்தது கவிதை “என்றது”

தீ

அந்த ஒரு இரவில் சாம்பசிவம் அந்த கேள்வியை ஆசானிடம் கேட்டே விட்டார். ஏன் இப்படி மாறிவிட்டீர்கள்? நாமெல்லாம் இப்படி செய்யக்கூடியவர்கள் இல்லையே என்றெல்லாம் கேட்டு துளைத்துவிட்டார். ஆசானுக்கு ஒரு நற்பழக்கம் உண்டு. கேள்வி கேட்பவர்களுக்கு…

இரக்கத்தின் அறம்

கொஞ்சம் இறங்கி பார்க்கவேண்டும்காதுகளை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்போகவேண்டியது உங்கள் இதயம்கொஞ்ச காலமாக அது இருக்கிறதாஎன சந்தேகம் வருகிறதுதோண்டி பார்த்துவிடுகிறேன்இருந்தால் சந்தோசம்இல்லையென்றால்என் இதயத்தைகொடுத்துவிடுகிறேன்கொஞ்ச காலம் வைத்துக்கொண்டுஅது இரக்கமான இன்னொருஇதயக்குட்டி போடும் வரைஇதயமே இல்லாமல்இரக்கமும் இல்லாமல்நான் காத்திருக்கிறேன்!!

புதை இருட்டு

புதைத்து வைத்திருந்தேன்யாராவது வந்து எடுத்துக்கொள்ளுங்கள்அது என் கவிதைக்குள் தான் இருக்கிறதுபொறுமையாய் தேடுங்கள்கிடைக்கும்மிக ஆழமாகவே புதைத்திருக்கிறேன்கொஞ்சம் சுவாசம் தடைபடலாம்அவ்வளவு இருட்டுக்குள்ஒளித்து வைத்திருக்கிறேன்சுலபமில்லை தான்புதைத்தபோது நானும்அவஸ்தைப்பட்டேன்தேடிவிட்டால் சொல்லுங்கள்நான் புதைத்துவைத்ததுநீங்கள் எடுத்தபோதுஎப்படி இருந்தது என்று!!!காத்திருக்கிறேன்.

கருப்பு

இந்த இரவிற்கு தனிப்பெயர் இருந்ததுபெயருக்கேற்ற அழகுஅட்டைக்கரி நிறம்அள்ள அள்ள அன்பைதொப்பை நிறைய வைத்திருந்ததுமெல்லிய இசையையும்கசிந்து கொண்டிருந்ததுகதவுகளைத் தாண்டிதூங்கும் ஒவ்வொருவரையும்எழுப்ப முயன்றுகொண்டிருந்ததுசிலர் எழுந்தனர்கழிவறை சென்றனர்சிலர் எழவில்லைஅவர்களுக்கு இரவின்கரிநிறம் பிடிப்பதில்லைசிலர் கனவுக்குள் பகலைவரைந்து கொண்டிருந்தனர்ஒருவன் மட்டும் இப்படிஅல்லாடிக்…

நினை

மதிய வெயில் மண்டையை பிளந்ததுவட துருவத்தை நினைத்துக்கொண்டேன்நாக்கு வறண்டு போனதுமீனை நினைத்துக்கொண்டேன்தலை சுற்றியதுதிருவிழா என்னுள் வந்ததுகண் இருட்டியதுவானத்தை வாங்கிக்கொண்டேன்நினைவு தப்பித்ததுதொட்டில் பிள்ளை ஆகிக்கொண்டேன்இதயம் நின்று கொள்ளவா எனக்கேட்டதுஇரு,அம்மாவை நினைத்துக்கொள்கிறேன்