நிரல் வாழ்க்கை

 எப்படி பார்த்தாலும் அவனுக்கு ரெட்டை நாடி தான். நடக்கும் போது அப்படி மூச்சு வாங்கும். கணிப்பொறியில் ப்ரோக்ராம் அடிக்கும் போது மட்டும் அந்த மூச்சு மட்டுப்படும். தியான நிலைக்கு செல்வான். ஒவ்வொரு படி நிலையாக…

புள்ளி

புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வர மறுத்தது. ஒருக்களித்து படுத்ததில் கொஞ்சம் ஆறுதல். நாற்பத்தியைந்து வயதில் எவ்வளவு தான் படுத்தி எடுக்கும்? எல்லாம் புகுத்திக்கொண்டது, தானே தொத்திக்கொண்டது அல்ல. வர வேண்டாம் என நினைப்பதெல்லாம்…

கிட்டும்

அதற்கு பிறகு அது கிட்டும்  அது நடந்து முடிந்த பின்  கிட்டியதா இல்லையா  என யார் சொல்வது?  கிட்டப்பட்டவன்  கிடத்தப்பட்டபின்  கிடைப்பதென்பது  கடைந்தெடுத்த இயற்கைத்தனம்  போல…

பாதி முடிந்த கதை

 அந்த ஒரு மணி நேரம் மட்டும் கடிகாரத்தை என் மகன் மாற்றாமல் இருந்திருந்தால், வாழ்க்கை எவ்வளவு அழகாக இருந்திருக்கும். இப்போது அந்த ஒரு மணி நேர இழப்பு அல்லது தவறு என்னை அலைக்கழிக்கிறது. அவனும்…

எதிரி

உயிர் நண்பன்  விதிவிலக்காக  ஒரு நாள் மட்டும்  உன் பரம எதிரியாகிறேன்  என்றான். இருந்துவிட்டுப்போ அடுத்த நாள் மறுபடியும்  நண்பன் தானே!!  பரம எதிரியானான் திட்டித்தீர்த்தான்  பிடித்து சாக்கடையில்  தள்ளினான்  இனி உன் முகத்தில் …

பாதாள மனிதர்கள்

என்னை அழுத்தம் கொடுத்த  அந்த மரண நொடிகளை  தேடிக்கொண்டே இருக்கிறேன்  திரும்ப கிடைக்காது  என்கிறார்கள்  கிடைத்தால் திரும்ப  பார்க்க வேண்டும்  எப்படி எல்லாம்  அது என்னை  சித்திரவதை படுத்தியது  அதே நொடி தான்  இன்னொருவனுக்கு…

விதை

மரம் கொஞ்சம் கூட  சொரணை அற்றது போல  விதையிலிருந்து தான் வந்தது  பின் ஏன் மறுபடியும்  விதைக்குள்ளேயே போய்  அடைந்துகொள்கிறது 

ஞானி

வாழ்க்கைக்கென்ன தெரியப்போகிறதுஇன்று, இப்பொழுதுநிம்மதியை தரவேண்டுமாரோதனைகளை தரவேண்டுமாஇல்லைவிட்டேத்தியாக இருக்கவேண்டுமா என்று அதற்கு ஒரு வேலையுமில்லைநான் போகும் பாதையில்அதுவும் கூட வருகிறதுவழுக்கி விழுந்தால்எழும் வரைகாத்திருக்கிறது வெடித்து சிரித்தால்பொறுமையாக பார்க்கிறது அழுது தீர்த்தால்எப்போது முடிப்பேன்என கன்னத்தில்கைவைத்து தேவுடுகாக்கிறது என்னமோ…

கனவு

அவரை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் அதிகரித்திருந்தது. சொல்லப்பட்ட தகவல்களை வைத்துப்பார்த்தால், இவரைப்போல் இவர் மட்டும் தான் இருக்க வாய்ப்பு உண்டு. வேறு எவரும் எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றை பல வருடங்களாக செய்து கொண்டிருப்பதாக அலுவலகத்தில்…