சண்டை

 தனி அறையில் எனக்குள் நான் விளையாடிக்கொண்டிருந்தேன் அவள் வந்தாள் அவளும் எனக்குள் அவனும் விளையாடிக்கொண்டிருந்தனர் நான் எட்டநின்று பார்த்துக்கொண்டிருந்தேன்!!சண்டை போட்டனர்நான் தான் காரணம் என்றனர்.

புள்ளி

 பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் நான் இருந்தேன் புள்ளி எனப்பட்டேன்விரிந்தேன் அண்டம் எனப்பட்டேன் இன்னும் விரிந்தேன் உலகம் எனப்பட்டேன் இன்னும் விரிந்தேன் வீடு எனப்பட்டேன் விரிந்து கொண்டே இருந்தேன் புள்ளி ஆகிவிட்டாய் என்றான் ஒரு குரு அது தான் எனக்கு தெரிந்தாகிவிட்டதே விரிதலும் சுருங்குதலும் தான் வாழ்வு மற்றதெல்லாம் எதுவுமாகாதமகா ஜடங்கள்!!!

விட்டகுறை

 அங்கே தான் முன்னோருமுறை சொல் வெளியிட்டு இருந்தேன் இப்போது தேடிச்சென்றேன் அங்கே இருக்கவில்லை எங்கும் போயிருக்க வாய்ப்பில்லை பிறர் கொள்ளை அடித்திருக்கவும் வாய்ப்பில்லை அவ்வளவு சுரத்தான ஒன்றும் இல்லை!!விட்டது விட்டது தான் இனிமேல் சொல்ல ஒன்றுமில்லை என்று தான் அவள் அந்த இடத்தில் சொல்லி விடைபெற்றாள்.ஒரு சித்தன் தான் விடைசொன்னான்.விட்ட சொல் அவளுடையதானது.இன்னும் ஏந்திக்கொண்டிருக்கிறாள்.

இறையொளி

 வீடு பார்த்தேன் அழுதேன் பிறர் சிரித்தனர் சந்தியா ராகம் பார்த்தேன் அழுதேன் பிறர் சிரித்தனர் மூன்றாம் பிறை பார்த்தேன் அதே கதை ஒரு நாள் சிதையில்  இருந்தார் பிறர் அழுதனர் நான் அமைதியாய் இருந்தேன்!!!