இறை

 கடவுளின் தொல்லை தாளாமல் ஒரு நாள் அவனை இருட்டறையில் அடைத்து வைத்தேன்அந்த நாள் இரவெல்லாம் ஒரே அழுகை அறையே நீரில் மூழ்கியது அடுத்த நாள் மக்கிப்போன வாசம் வந்தது திறந்து பார்த்தால் இறைவன் எரிந்து கொண்டிருந்தான் நேற்றைய தண்ணீரை நெருப்பாய் மாற்றி இருப்பான் ஆனாலும் வெளியே அனுப்ப மனமில்லை அனுப்பினால் நடக்கும் விபரீதங்கங்களுக்கு அவனும் பொறுப்பேற்க மாட்டேன் என்கிறான் என்னையும் விட்டு…

மடி

இறந்த பின் நான் முன்பிருந்த இடத்திற்கெல்லாம் சென்று வரலாம் என்றொரு வரம் கிடைத்ததுஒவ்வொருவர் மடியிலும் ஒரு முறை கிடந்து வந்தேன் மனைவியின் மடியில் இன்னும் என் வாசம் சுற்றிக்கொண்டு இருந்தது மகனின் மடியில் என் ஒற்றை நரை முடி தள்ளாடிக்கொண்டிருந்தது தந்தையின் மடியில் என் எச்சில் உலர்ந்து கிடந்தது தாயின் மடியை தேடித்தேடி அலைந்தேன் இன்னொருவன் சொன்னான் தாயின் மடி எப்போதும் கிடைக்காது அவளுக்கு…

கங்கு

 எங்கெங்கு காணினும்என்னைத் தேடியலைந்தேன்.கருவில் என்னைக் கேட்டேன்அது நான் இல்லைஇந்தப்பெண்ணின் ஆங்காரம்என்றதுபள்ளியில் என்னைக் கேட்டேன்புத்தக அடுக்கில்நீ ஒரு காகிதம் என்றதுமணத்தில் என்னைக் கேட்டேன்காதலின் ஒரு தேய்பிறைத்துளிஎன்றதுஅலுவலில் என்னைக் கேட்டேன்முதல் போட்டவனுக்குஅடிமையானவன் நீஎன்றதுமுதுமையில் கேட்டேன்அமிழ்ந்து கொண்டிருக்கும் ஒரு துளிஎன்றதுஇன்னும்…

40

நரம்புகளின் மீட்டலில் இப்போது வேறொரு தீண்டல்வருடுதலும் வாசனைகளும் அழுத்தங்களும் வெவ்வேறுசுற்றமும் வேறு பெரிது பெரிதானது இளம் பச்சைகள்எல்லாம் கொதிக்கும்ரத்தமானதுஒருத்தி மட்டும்கண்ணில் மலரையும் உதட்டில் துடிப்பையும் மனதில் கொண்டாட்டத்தையும் கொண்டாள்உயிர் பிரிந்தது கொண்டாட்டமாகும் இங்கு மட்டும்.

கலாகாரன்

 எப்பொழுதும் உம்மென்றுஇருக்கும் வாய் அவனுக்கு!இரவின் காதலன்உரித்துக்கொண்டு வெளிவருவான்நகரத்துக்கே வெளிச்சம் பாய்ச்சுவான் முகங்களை எல்லாம் தன் முகம் கொண்டு தழுவுவான் விடிவதற்குள் ஒரு அவசரம் அசுரனின் வேகத்தில் இரவை பருகி முடிப்பான். விடியும்.சாந்தமாகி பலரின் காலில் படாமல் இருக்க பகலின் இருட்டு தளங்களில் உறங்கிக்கிடப்பான். 

அமைதி

 பழைய நினைவுகளின் மேய்ப்பன் சொன்னான், அப்போதெல்லாம் ஒரே நினைவு ஒன்றைத்தாண்டிய பின் தான் இன்னொரு நினைவு பின் செல்லும் ஒவ்வொன்றுக்கும் இரை உண்டு நின்று நிதானமாக புசிக்கும்.பின் வரும் நினைவுக்கும்முகமன் கூறும். புதிய நினைவுகளின் மேய்ப்பன் சொன்னான், நான் அத்தனை நினைவுகளையும் ஒரு அறைக்குள் அடைப்பேன் அவை பெரும் ஓலம் போடும் ஒன்றின்…

யாதெனின்

எழுத்தாளன் எனப்படுவான்இவனெல்லாம்ஆளன் என்ற விளி உண்டு ஆனால் இலகுவான வாழ்க்கையை வாழத்தகுதி இல்லாதவனாக இருப்பான்.அவனுக்கு இஸ்திரி போடக்கூட இந்திரியங்கள் உதவாது. விழிப்பில் கனவில் எழுத்தும் வாசிப்பும் இருப்பவனுக்கு கண் முன் என்ன தெரிந்துவிடும்? அவனுக்கு தனிக்குணங்கள் உண்டு. அச்சமில்லாதவன் கூக்குரல் எழுப்புவான் நினைத்த பொழுது அழுவான் சில நிமிடங்கள் உள்ளிருக்கும் இதயத்தை வெளியெடுத்து ரசிப்பான்இன்னொரு…

நிழல்

நிழலுக்கும் நிழலுக்கும்நிழல் யுத்தம் நிழலோடு ஒருவன் இருந்தான் நிழல் இழந்தவன் ஒருவன் இருந்தான் ஒருவனுக்கு அது பாரம்இன்னொருவனுக்கு அது பலம் நேரம் கடந்த பயணத்தில் நிழலுக்கு மனிதன் பாரமானான் நிழல் பிரிந்தது நிழல் இல்லாத முண்ட மனிதன் இனி சண்டை போட ஏதுமில்லைநம் வழி நாம் பார்ப்போம் என பிரிந்தார்கள்! 

குப்பை

 எவ்வளவு கிறுக்கினாலும் கவிதை வரவில்லை இதயத்தில் கீறு என ஒரு அசரீரி வந்ததுகீறினால் நானே வெளிவந்தேன்வந்தவன் சொன்னான்.. வலித்தால் அது கவிதை வருடினால் அது மக்கும் குப்பை!!!