Philadelphia

இதோ இன்னொரு படம்(பழையது தான்!!!வருடம் 1993). இந்தியாவின் உள்ளே சில நேரங்களில் வாழ்க்கையை தொட்டு படம் எடுக்கிறார்கள். வெளியே பல படங்கள்.

இவர்கள் சிறிய விஷயத்தை, உணர்வுகளோடு ஊதி பெரிதுபடுத்துவதில் கில்லாடிகள். படத்தின் ஆரம்பத்தில் அதிகம் தொட்டுகொள்ளாமல் தான் பார்த்தேன். நாயகனுக்கு எய்ட்ஸ் என்ற விஷயத்தை தொட்டவுடன், அடடே நல்லா இருக்கே இந்த மேட்டர் என்று நினைத்து பார்க்க தொடங்கியது, முடிவில் கொஞ்சம் கணத்தோடு தூங்க போனேன்.
Tom Hanks மற்றும் Denzel Washington, இவர்களை தவிர வேறு யாரையும் எனக்கு தெரியவில்லை. படத்தை சுற்றி இவர்களின் ஆதிக்கம். அதிலும் Denzel Washington, எங்காவது பார்த்தால், எங்க ஊருக்கு வந்து கொஞ்சம் பாடம் எடுங்களேன் என்று கேட்கலாம் என்று நினைக்கிறேன்.
இங்கே பலரின் வாழ்க்கை முறையில் ரகசியமாக புகுந்துவிட்ட ஒரினசேர்க்கை பற்றி மேலாக சொல்லியிருக்கிறார்கள். அதை புரிய வைக்க அப்பட்டமான காட்சிகள் கண்டிப்பாக இல்லை.
ஒரு தனி மனிதனின் உணர்வுக்கு பாதகம் ஏற்பட்டால், அதை மில்லியன் டாலரில் ஈடுகட்டி எல்லாரும் மகிழ்ந்து கொள்ளும் நிகழ்வை படமாக்கி, Tom Hanks’க்கு OSCARம் வாங்கி கொடுத்து விட்டார்கள்.

5 Replies to “Philadelphia”

  1. yep, this is an amazing movie. got an oscar for tom hanks. one of my favorites.

    the intial title song by bruce springsten is a big plus.

  2. vaanga thala.

    I did miss the first few scenes. Will definitely listen to the title song.

    Tom Hanks, for sure he is the best actor of our period.

Comments are closed.