Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
அலுவலக மாலைகள் எப்பொழுதும் திராபையானது. ஒன்று, மொத்த உடம்பையும் பலி கேட்டு, அதை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருக்கும். இல்லையென்றால், இன்னும் சில வாடிக்கையாள எதிரிகளிடம் பாருக்கு சென்று மறுபடியும் உரையாட வேண்டி இருக்கும். இன்னும்…
மனசு சரியில்லை என்றான் நண்பன் எனக்கும் சரியில்லை நேற்று அப்பாவிடம் சண்டை பணம் குறைவாகஇருக்கிறது என்றான் என்னிடமும் இல்லை மாதக்கடைசி நேற்று பூக்கள் சரியாக பூக்கவில்லை எனக்கும் தான் நாளை எனக்கு கல்யாணம் அச்சச்சோ எனக்கு முன்பே கல்யாணம் ஆகிவிட்டதே சொல்வது எதையும் எனக்காக கேட்காத சட சென்மங்கள்
இன்று காலையில் இருந்து கவிதைகள் கொட்டிக்கொண்டிருந்தது நிற்காமல் காட்டிக்கொண்டிருந்தது நில் என்றால் நிற்கவில்லை மூச்சு முட்டிப்போனது வா நடை போகலாம் என கூட்டிப்போனேன் உளறிக்கொண்டே வந்தது வாயை மூடு என்றேன் அது எனக்கில்லை என்றது என்னதான் இருக்கிறது உனக்கு எனக்கு நீ தான் என்றது
இப்போது வரை நாற்பது கோடியே எழுபது லட்சத்தி ஐம்பதாயிரத்து சொச்ச முறை சுவாசத்தை வெளியே விட்டிருக்கிறேன்.திரும்பி எடுத்துக் கொள்ள வேண்டும் பொறுக்கிக்கொண்டிருக்கிறேன்.ஒன்று பள்ளியில் ஒன்று கக்கூஸில் ஒன்று வாய்க்காலில் ஒன்று சண்டைக்கிடையில் ஒன்று அம்மாவின் மடியில் ஒன்று கட்டிலுக்கடியில் ஒன்று மரத்துக்கு பின்னால் மூச்சு விடாமல் மூச்சை பிடித்துக்கொண்டு மூச்சை தேடிக்கொண்டிருக்கிறேன் பத்திரமாக மூட்டை கட்டவேண்டும் நாளை நான் எடுத்துச்செல்லவேண்டும்
நகுலனைப்படிஆத்மாநாமைப்படி விக்கிரமாதிதனைப்படி தேவதச்சனைப்படி எல்லாரையும் படி உன்னையும் சேர்த்து வைத்துப் படி அப்போது தான் அது படி
ஒரு காலத்தில் தவளையாய் இருந்தேன் இப்போது மனிதனாய் இருக்கிறேன் அண்ணாந்து பார்த்தால்விமானம் அந்த ஆகாய வனாந்திரத்தில் ஒரு நாள் நானும் இருந்திருக்கிறேன் தவளை கத்தியது நானும் இருந்திருக்கிறேன்!!!
உயிர் நண்பன் விதிவிலக்காக ஒரு நாள் மட்டும் உன் பரம எதிரியாகிறேன் என்றான். இருந்துவிட்டுப்போ அடுத்த நாள் மறுபடியும் நண்பன் தானே!! பரம எதிரியானான் திட்டித்தீர்த்தான் பிடித்து சாக்கடையில் தள்ளினான் இனி உன் முகத்தில் …
என்னை அழுத்தம் கொடுத்த அந்த மரண நொடிகளை தேடிக்கொண்டே இருக்கிறேன் திரும்ப கிடைக்காது என்கிறார்கள் கிடைத்தால் திரும்ப பார்க்க வேண்டும் எப்படி எல்லாம் அது என்னை சித்திரவதை படுத்தியது அதே நொடி தான் இன்னொருவனுக்கு…
மரம் கொஞ்சம் கூட சொரணை அற்றது போல விதையிலிருந்து தான் வந்தது பின் ஏன் மறுபடியும் விதைக்குள்ளேயே போய் அடைந்துகொள்கிறது