சண்டை

 தனி அறையில் எனக்குள் நான் விளையாடிக்கொண்டிருந்தேன் அவள் வந்தாள் அவளும் எனக்குள் அவனும் விளையாடிக்கொண்டிருந்தனர் நான் எட்டநின்று பார்த்துக்கொண்டிருந்தேன்!!சண்டை போட்டனர்நான் தான் காரணம் என்றனர்.

புள்ளி

 பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் நான் இருந்தேன் புள்ளி எனப்பட்டேன்விரிந்தேன் அண்டம் எனப்பட்டேன் இன்னும் விரிந்தேன் உலகம் எனப்பட்டேன் இன்னும் விரிந்தேன் வீடு எனப்பட்டேன் விரிந்து கொண்டே இருந்தேன் புள்ளி ஆகிவிட்டாய் என்றான் ஒரு குரு அது தான் எனக்கு தெரிந்தாகிவிட்டதே விரிதலும் சுருங்குதலும் தான் வாழ்வு மற்றதெல்லாம் எதுவுமாகாதமகா ஜடங்கள்!!!

விட்டகுறை

 அங்கே தான் முன்னோருமுறை சொல் வெளியிட்டு இருந்தேன் இப்போது தேடிச்சென்றேன் அங்கே இருக்கவில்லை எங்கும் போயிருக்க வாய்ப்பில்லை பிறர் கொள்ளை அடித்திருக்கவும் வாய்ப்பில்லை அவ்வளவு சுரத்தான ஒன்றும் இல்லை!!விட்டது விட்டது தான் இனிமேல் சொல்ல ஒன்றுமில்லை என்று தான் அவள் அந்த இடத்தில் சொல்லி விடைபெற்றாள்.ஒரு சித்தன் தான் விடைசொன்னான்.விட்ட சொல் அவளுடையதானது.இன்னும் ஏந்திக்கொண்டிருக்கிறாள்.

இறையொளி

 வீடு பார்த்தேன் அழுதேன் பிறர் சிரித்தனர் சந்தியா ராகம் பார்த்தேன் அழுதேன் பிறர் சிரித்தனர் மூன்றாம் பிறை பார்த்தேன் அதே கதை ஒரு நாள் சிதையில்  இருந்தார் பிறர் அழுதனர் நான் அமைதியாய் இருந்தேன்!!!

சுதந்திரம்

 அந்த அம்மாளுக்கு ஒரு வினோத பழக்கம் உண்டு. சிறிய ஊசியை வைத்துக்கொள்ள அனுமதி இருந்தது. அதன் மூலம் ஒரு சிறிய வலியை அவள் மற்றவர்களுக்கு கடத்திக்கொண்டே இருந்தாள். அவருக்கு மட்டும் எதற்கு இந்த விபரீத…

நிரல் வாழ்க்கை

 எப்படி பார்த்தாலும் அவனுக்கு ரெட்டை நாடி தான். நடக்கும் போது அப்படி மூச்சு வாங்கும். கணிப்பொறியில் ப்ரோக்ராம் அடிக்கும் போது மட்டும் அந்த மூச்சு மட்டுப்படும். தியான நிலைக்கு செல்வான். ஒவ்வொரு படி நிலையாக…

புள்ளி

புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வர மறுத்தது. ஒருக்களித்து படுத்ததில் கொஞ்சம் ஆறுதல். நாற்பத்தியைந்து வயதில் எவ்வளவு தான் படுத்தி எடுக்கும்? எல்லாம் புகுத்திக்கொண்டது, தானே தொத்திக்கொண்டது அல்ல. வர வேண்டாம் என நினைப்பதெல்லாம்…

சாம்சங்

 தனித்திருந்த காலங்களில் அந்த மனிதனின் முகம் கண் முன் வந்து போகும். எத்தனை எத்தனையோ காட்சிகள், சம்பவங்கள், வார்த்தைகள் மறந்து போயிருக்கிறது. ஆனால், இது மட்டும் நினைவில் நங்கூரம் போட்டு நகர மாட்டேன் என…

கிட்டும்

அதற்கு பிறகு அது கிட்டும்  அது நடந்து முடிந்த பின்  கிட்டியதா இல்லையா  என யார் சொல்வது?  கிட்டப்பட்டவன்  கிடத்தப்பட்டபின்  கிடைப்பதென்பது  கடைந்தெடுத்த இயற்கைத்தனம்  போல…

பாதி முடிந்த கதை

 அந்த ஒரு மணி நேரம் மட்டும் கடிகாரத்தை என் மகன் மாற்றாமல் இருந்திருந்தால், வாழ்க்கை எவ்வளவு அழகாக இருந்திருக்கும். இப்போது அந்த ஒரு மணி நேர இழப்பு அல்லது தவறு என்னை அலைக்கழிக்கிறது. அவனும்…