நினை

மதிய வெயில் மண்டையை பிளந்ததுவட துருவத்தை நினைத்துக்கொண்டேன்நாக்கு வறண்டு போனதுமீனை நினைத்துக்கொண்டேன்தலை சுற்றியதுதிருவிழா என்னுள் வந்ததுகண் இருட்டியதுவானத்தை வாங்கிக்கொண்டேன்நினைவு தப்பித்ததுதொட்டில் பிள்ளை ஆகிக்கொண்டேன்இதயம் நின்று கொள்ளவா எனக்கேட்டதுஇரு,அம்மாவை நினைத்துக்கொள்கிறேன்

உதிர்

உதிர்த்துப்போடு என்றான்எதற்கு என்றேன்அப்போது தான் உன்னை நீஉணர முடியும்சரி, உதிர்த்தேன்என்னுள் இருந்த குழந்தைஉதிர்ந்ததுஒரு ஆடவன் உதிர்ந்தான்பெண் உதிர்ந்தாள்அடுத்து என்ன…மாணவன்பணியாளன்பொதுப்பணித்துறை அதிகாரிஅப்பாதாத்தா முடிந்ததா என கேட்டான்ஆம், முடிந்ததுஇப்போது நீ யார் என்றான்உன் சீடன் என்றேன்அதையும் உதிர்த்துப்போடு…

நொடி

ஒரு நாள் மன்னிப்பு கேட்பீர்கள்அந்த நாளில்நான் என்னையே உரித்துப்போட்டிருப்பேன்என்னை பிய்த்து பிய்த்துதோண்டி தெரிந்து கொள்வீர்கள்அங்கொரு நாள்உங்களை மன்னித்திருந்தேன்இன்னொரு நாள்உங்களுக்கு உதவியிருந்தேன்மற்றுமொரு காலையில்குட் மார்னிங் சொல்லியிருந்தேன்ஏகாந்த மாலையில்கண்ணிழந்த உங்களுக்குகைபிடித்து பூ இதழ்காண்பித்தேன்ஒரு நாள் பத்து மணிபசித்திருந்தீர்கள்நான்…

சிறை

உலகம் அழியப்போகிறதோ என்னமோ, இன்றைக்கு தோசை நன்றாக வந்திருந்தது. வழக்கமாக பாதி பிய்ந்து போகும், இல்லையெனில், நானா நீயா என என்னிடம் சண்டை போடும், அதே நேரத்தில் கல்லுடன் காதல் கொண்டிருக்கும். பசை போட்ட…

அவள்

ரணத்தில் இருந்து மீண்டிருந்தேன்இவ்வளவு ரத்தமாஎவ்வளவு கண்ணீர்சுற்றிலும் ரசாயன கலவைவெள்ளை உடை இறைகள்மீண்டு வந்ததே பெரும்பாடுஇன்னும் காலம் வேறு உள்ளதுஎப்படி கடக்கஇனியெல்லாம் கடக்கவேண்டும்இவள் யார்எனக்காக கண்ணீர் விட்டுக்கொண்டுகொஞ்சம் தள்ளி நில்லேன்உன்னை சரியாக பார்த்துக்கொள்கிறேன் 

வேர்

ஊரில் இருந்து வீட்டுக்கு வரும் ஒவ்வொரு தருணமும் அம்மா எனக்காக என்ன செய்தி வைத்திருக்கிறார் என்பதிலேயே இருக்கும். எல்லா வார இறுதி நாட்களும், அவளின் கதைகளிலே ஓடி விடும். அத்தனை கதைகளிலும் இயற்கை அங்கிங்கெனாதபடி…

நான்

எழுத்தாளனாய் இது ஒரு புது அனுபவம். நான் எழுத நேர்ந்ததே ஒரு துர்கனவு என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், என் கனவில் ஒரு பத்து ஸ்குயர் இடம் கேட்டு ஒருவன் வந்திருந்தான். ஒரு காலம் இருந்தது,…

கொலைப்பசி

நேற்று வரை இருந்த நிதானம் இப்போது இல்லை. வழமையாக பேசும் வார்த்தைகள் வரவில்லை. அப்பாவிடம் எப்போதும் போல் நடக்கும் சுகாதார கேள்விகள், பொதுநல விசாரிப்புகள், அதற்கப்புறம் என்ன பேசுவது என்றெல்லாம் தெரியாமல், அம்மாவிடம் கொடுக்க…

மூக்கு

வீட்டின் முன் இருக்கும் அறையில், பிணம் இருப்பது இப்போது தான் முதல் முறை. அந்த அறையில் தான் இரண்டு சைக்கிள்களும், தட்டுமுட்டு சாமான்களும் வாசம் செய்யும். வீட்டு உரிமையாளர், அந்த அறையை ஏன் கட்டச்சொல்லி…