40

நரம்புகளின் மீட்டலில் 
இப்போது 
வேறொரு தீண்டல்
வருடுதலும் 
வாசனைகளும் 
அழுத்தங்களும் 
வெவ்வேறு
சுற்றமும் வேறு 
பெரிது பெரிதானது 
இளம் பச்சைகள்
எல்லாம் 
கொதிக்கும்
ரத்தமானது
ஒருத்தி மட்டும்
கண்ணில் மலரையும் 
உதட்டில் துடிப்பையும் 
மனதில் கொண்டாட்டத்தையும் 
கொண்டாள்
உயிர் பிரிந்தது 
கொண்டாட்டமாகும் 
இங்கு மட்டும்.