தெய்வம் இல்லாத கோயில்
தண்ணீர் இல்லாத ஆறு
மரங்கள் இல்லாத மலை
அழகு இல்லாத பெண்கள்
இப்படி எல்லாம் எம் நகரத்து மக்களே தங்கள் ஊரை பற்றி பெருமையாக சொல்லி கொள்வதுண்டு.
கோடை காலத்தில் தமிழகத்து மக்கள் அதிகம் கவலைபடும் இடம். இங்க இவ்ளோ வெயில் அடிக்குதே, பாவம் இந்த வேலூர்காரங்க என்ன தான் பண்ணுவாங்களோ? இப்படி பல பேர் நினைக்கும் நகரம். ஆனால் இந்த மக்கள் அதற்கு எல்லாம் சலைத்தவர்கள் அல்ல என்று நினைக்க தோன்றியது, வேலூர் கோட்டை பார்க்கும் போது.
இப்பொ மேட்டர் இன்னா தெரியுமா. இங்க தான் இந்தியாவோட முதல் சுத்ந்திர போராட்டம் நடந்தது, எப்பொ தெரியுமா 1806. அதோட 200வது ஆண்டு விழா, எங்க ஊரு ஒரே ஜொலி ஜொலிப்பு. அதுக்காக இங்க இருக்கிற கோட்டைல திப்பு மகால் திறந்து விட்டாங்க. நல்ல கூட்டம். தமாஷ் சொல்ரேன் கேளுங்க,
சரியா 4:00 மணி. நாங்க போன நேரத்துக்கு சில பெரிய தலைங்க வந்து இருந்தது. அவுங்க பின்னாடியே எல்லா மக்களும் போயிட்டோம். நம்ம மக்கள் ரொம்ப புத்திசாலிங்க (என்னயும் சேத்து தான்). அவங்க எதோ பெரிய ஆபிசர் ரூமுகுள்ள போக, நாங்களும் போயிட்டோம். அப்படியும் திப்பு மகால் போகலமாம். எங்களுக்கு என்ன தெரியும். அந்த பெரிய மனுசங்க பின்னாடியே நாங்களும். அதுல அந்த ஆபிசர் டென்சன் ஆகிட்டாரு. நம்ம வயசு பசங்க, கலாச ஆரம்பிசிட்டாங்க. அதுல இன்னமும் டென்சன் ஆன ஆபிசர், கதவ முடிட்டாரு, ரெண்டு பக்கமும். மக்கள் கொந்தளிச்சு போயிட்டாங்க. கதவ பலமா தட்டறதும், கத்தறதும் ஒரே கூச்சல். இதுல என் பின்னாடி இருன்த ஒரு பெருசு சொல்லுது, ‘மறுபடியும் ஒரு சிப்பாய் கலகம் வந்துரும் போல இருக்கே’.
ஒரு வழியா உள்ள போயிட்டோம். அங்க பார்த்தா, ஒரு கைட் கூட இல்ல. நம்ம ஆளுங்களுக்கு சொல்லனுமா, ஆளாளுக்கு கைட் ஆகிட்டாங்க. ஒருத்தன், இங்க தான் திப்பு சுல்தான் பல்லு விளக்குவார் அப்படீன்ற அளவுக்கு அளந்து விட ஆரம்பிச்சிட்டாங்க. உண்மை என்னனா, திப்பு இறந்தப்புறம் அவரோட குடும்பம் மொத்ததயும் இங்க அடைச்சி வெச்சிட்டாங்க. திப்பு சுல்தான் வாரிசுகளோட உதவியோட தான் அப்போ இருந்த சிப்பாய்கள் எல்லாம், வெள்ளைகார துரைங்க கூட மோதினாங்க. இதெல்லாம் அங்க இருந்த ஒரு அரசாங்க ஊழியர் சொன்னது.
திரித்து பேச இது என்ன செல்வி சீரியல் கதையா? தெரியவில்லை என்றால் சும்மா இருப்போம். இது ரத்தம் தோய்ந்த வரலாறு அய்யா.
//இது ரத்தம் தோய்ந்த வரலாறு அய்யா.
Resembles Ajit kumar punch dialogue! 🙂
நிழலும் நிஜமும் ஒன்னாகாது தல.