சான் பிரான்ஸிஸ்கோவும் மசாலா தோசையும்…

வழக்கம் போல ரயிலில் இன்றைய நியுஸ் பேப்பர். இங்கே நிறைய பேருக்கு படிக்க மட்டுமே நேரம் உள்ளது, அதை வைத்து கொள்ள பிரியபடுவதில்லை. இது ஒரு வகையில் என்னை போன்றோருக்கு (ஒசின்னு சொல்ல வரேன்) உதவி தான். எப்போதும், பட படவென்று திருப்பிவிட்டு, என் போக்கில் பாட்டு கேட்பது வழக்கம். இன்றைக்கு கொஞ்சம் படிக்கவும் செய்தேன். படித்தது சான் பிரான்ஸிஸ்கோ க்ரானிகல் (San Francisco Chronicle), செய்தி நம்ம ஊர் தோசை பற்றியது. இந்தியா என்ற வார்த்தை பார்த்தாலே விட மாட்டேன், இதில் (மசாலா) தோசை படம் போட்டு, அதை பற்றி எழுதியிருந்தால், படிக்காமல் இருக்க தோன்றாது.

சுவாரஸ்யம் தான், ஒரு வெளி நாட்டவர் (Michael Bauer) நம் ஊர் தோசை வார்க்கும் உணவகம் தான் சிறந்த பத்தில் (in San Francisco) முதல் என்கிறார். அமெரிக்காவில் எப்போதுமே வித விதமான இதர நாட்டு உணவு வகைகள் மட்டுமே பெயர் பெறுகிறது. அந்த வகையில், இந்திய உணவு வகைகள், இந்தியர் அல்லாத பலரால் விரும்பபடுவது உங்களில் பலர் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. நானும் நண்பரும் அடிக்கடி போகும் பஞ்சாபி உணவகத்தில் எங்கள் இரண்டு பேரை தவிர வெறு இந்தியர்களை பார்ப்பது கடினம். அவ்வளவும் அமெரிக்கர்களும், மற்ற நாட்டவரும் தான். அப்படி என்ன தான் ஈர்த்து விட்டது இவர்களை? நம் நாட்டின் கார சாரமான சமையல் முறையாக இருக்குமோ என்று தான் தோன்றுகிறது. அதுவும் இல்லாமல், இவர்களுக்கு எப்போதும் ஒரு மாதிரி வித்தியாசபடுத்தி சாப்பிடும் எண்ணம் பலரிடம் உள்ளது.

இந்த செய்தியை படித்தவுடன், கண்டிப்பாக இந்த வார இறுதியில் தோசா உணவகத்துக்கு சென்று விடுவேன் என்று தான் நினைக்கிறேன். நீங்களும் சான் பிரான்ஸிஸ்கோ பக்கம் இருந்து, தோசை பிரியராய் இருந்தால், வாங்களேன் அங்கே போய் ஒரு கை பார்போம்.

2 Replies to “சான் பிரான்ஸிஸ்கோவும் மசாலா தோசையும்…”

  1. நம்ம ஊருக்குப் பெருமை சேர்க்கும் சில விஷயங்களில் முக்கியமானவை இட்லி, தோசை முதலியவை….அது நம்போன்றோருக்கு வெளியூர் வந்துதான் புரிகிறது.

    வாழ்த்துக்கள்!

Comments are closed.