இரு சேனல்களுக்கு இடையே நடந்த அப்பட்டமான மோதலை/போட்டியை காட்டிய நிகழ்ச்சி இது. அத்தனை சிக்கல்களையும் கொஞ்சம் மறந்து விட்டு பார்த்ததில் சிறிது லேசாகத்தான் இருந்தது. பல சமயம், மெல்லிய புன்னகை புரிய மட்டுமே சம்பவங்கள் இருக்கிறது. பக்கத்தில் இருப்பவர் அதிறும் அளவுக்கு சிரித்து பல நாளாகி விட்டது. இந்த நிகழ்ச்சியில் பலர் நாம் அப்படி மாற உத்திரவாதம் கொடுக்கிறார்கள்.
இந்த வடிவேல் கணேஷ் மற்றும் அவரின் நாட்டுபுற பாடலும் நிஜத்திலும் அசத்தல். கிண்டலும், கேலியும், பரிதாபமும் கலந்தே பல காமெடி இருக்கும் நேரத்தில், பாட்டாலும் நடனத்தாலும் (சில சங்கடபடுத்தினாலும்) நம்மை சில நிமிடங்கள் சிரிக்க வைக்கிறார். இப்படி ஒரு நாட்டுபுற பாடலை சமீபத்தில் கேட்ட ஞாபகம் இல்லவே இல்லை. இத்தனைக்கும் இது இவருடைய சொந்த சரக்கு. வடிவேலும் கூட ஜோதியில் ஐக்கியமாகிறார். கல்லூரி தினத்தில் மேடையில் இப்படி பாட, கீழே நம் இளவட்டங்கள் தப்பாட்டம் போடும் காட்சிகள் சட்டென சொடக்கிவிட்டு போனது.
…ஆமா ராசா ஆமா ராசா ஆமா ராசா…
it was good.
Yes. It is. Thanks for coming in Subbudu.