ஆவியுடன் ஒரு இரவு

கண்ணம்மா, நான் இத பத்தி கண்டிப்பா எழுதியே ஆகனும்னு சொல்றியா? ஆமாம் எழுதனும். இதுக்கு வேற எதும் சாக்கு சொல்லபடாது.

ஆவி எல்லாம் இருக்கா இல்லையான்னு ஒரு முடிவில்லாம, இதயெல்லாம் கற்பனை பண்ணி எழுதறது கஷ்டம்டா. போட்டோ பாத்து கவிதை எழுத தெரியுது இல்ல, அங்க இல்லயா கற்பனை. எல்லாம் வரும், எழுதலாம். ஏன் இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்ட நீ? அப்படித்தான் பண்ணுவேன், எழுத முடியுமா முடியாதா? உனக்கு ஒன்னு சொல்றேன் கேளு, பதிவுலகம் அப்படின்றது அறிவிக்கபடாத ஒரு இலக்கிய உலகம். ஒரு வகையில எழுத்தாளர்களோட அடுத்த ரகுவம்சம் தான் இது. இதுனால என்ன சொல்ல வர? என்ன சொல்ல வரேன்னா, எழுத்து அப்படின்றது தானா உள்ளுக்குள்ள அப்படியே உருகி வரனும். நீ சொல்ற இந்த டாபிக் எழுத ஒரு feel கிடைக்காது கண்ணா. அதுவும் இல்லாம, நீ சொன்ன இந்த தலைப்பு வேற மலையாள வாடை அடிக்குது. ஒரு எழுத்தாளனோட உள்ளகிடைக்கையை புரிஞ்சிக்கோ ராசாத்தி. போடா லூசு, blog எழுதறதே ஒரு வெட்டி வேலை. போனா போகட்டும்னு, அத கொஞ்சம் மதிச்சு, சும்மா ரவுசு பண்ணினா இவ்ளோ டயாலாக் பேசுற. போதும் இதோட நிறுத்திக்கோ.

நிகழ் உலகம் – ஏலே மொக்க, இவன் தொல்லை தாங்க முடியலடா. நைட் ஆனா, அவனவன் கனவுல ஆஞ்ஜலீனா கூட காபி பப் போய்கிட்டு இருப்பான். அப்போ வந்து ராசாத்தி, blog அது இதுன்னு நடுராத்திரியில டிஸ்டர்ப் பண்றானுங்க. விடுறா. அவன் நிலமை தெரிஞ்சும் நாம அப்படி பேசறது எப்படி நியாயமாகும். இருக்கட்டுமே, ஒரு நாள் சரி, ரெண்டு நாள் சரி. அஞ்சாறு மாசமா இதே தொல்லையா போச்சேடா. இவனோட ஆளு செத்ததுக்கு, இவன் எங்கயாச்சும் விழுந்திருக்கலாம்.

கொஞ்சம் குரல் உயர்த்தி பேசியதில் விழித்தே விட்டிருந்தான். ஆனால், அசைவு காட்டாமல். கோவத்தில் சொன்னாலும், அதன் உண்மை இவன் கண்களை கொஞ்சம் கசக்கிவிட்டிருந்தது. அப்படி ஆகியிருக்கலாமோ?

4 Replies to “ஆவியுடன் ஒரு இரவு”

  1. பலே நியும் கூட ஆவியுடன் பேசர நம்ம வருங்ன்கால ப்ரெசிடென்ட் மதிரி!

  2. Vj

    அத ராசாத்தி கிட்டயே கேட்டேன். ஆமான்னு சொல்றா.

Comments are closed.