(கொஞ்சமே (பெரிதாகிவிட்ட)சிறுகதை முயற்சி)
ஆடி மாதத்திலும் அந்த கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது. கல்யாண களை தான். எல்லாம் ரகுவின் பிடிவாத தனத்தால். எப்போதும் பர பர குணம் அவன். சொல்வதை கேட்காத குணமும் சேர்ந்து கொண்டது. நல்லவிதமாய் NASAவில் (ரகு செல்லமாக Rug அமெரிக்காவில்) வேலை செய்வதால் அவன் அப்பாவும் இவனிடம் பெரிதாய் அலட்டிகொள்வதில்லை. ரகுவை அரட்டி புரட்டினால் எதிரில் இருப்பவர் நிலைமை பரிதாபம் தான். இப்போதைக்கு சஷ்டியப்த பூர்த்தி செய்யறதெல்லாம் பழசாகி போச்சு என்று சொல்லியும் கேட்காமல், அப்பா பிறந்த நாளிலேயே ஏற்பாடு செய்தான். அவன் சொன்ன காரணம் கொஞ்சமாய் பயமுறுத்தினாலும், இவன் நினைத்ததை யாரும் தடுத்தாட்கொள்ள முடியாத நிலை. கல்யாணமும் முடிந்திருக்கவில்லை. ரகு மெத்த படித்ததை நினைத்து இப்போது அப்பாவுக்கு கவலை. இல்லையென்றால் ஏதோ Nano technology, Energy technology என்று சொத்தை வேலையில் மிதமான சம்பளத்தில் காலம் தள்ளியிருப்பான். அதிகமாய் படித்து, அதிகமாய் வேலை செய்து நல்ல பெயர் வாங்கி, அமெரிக்க குடியுரிமை பெற்று, இப்போது Voyager Mars Programல் பணி.
60ம் கல்யாணம் அமோகம். ரகு பெரும்பாலும் ‘நன்னா செஞ்சுட்டேள். உங்க அப்பா, அம்மாவுக்கு மனசெல்லாம் நெறஞ்சு போயிருக்கும். எனக்கும் தான் வந்து பொறந்திருக்கே ஒரு திராபை’ போன்ற டயலாகுகளை கேட்டவாறே ஓடி ஓடி களைத்து போனான். நடுவில் மேடையில் பாடிகொண்டிருந்த பாடகர் வேறு, இவனை பாட அழைக்க, ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ பாட்டை தப்பு தப்பாக முச்சிரைக்க பாடி விட்டு, மறுபடியும் வேகபடுத்தி வேலை செய்தான்.
ரகுவின் அப்பா இப்போது வழக்கம் போல கண்ணீருடன், போகாத இங்கயே இருந்துடேன். ரகு – இல்லப்பா, உங்களுக்கு தெரியும். Voyager சாதாரண விஷயமில்ல. எனக்கு பெருசா பேச நேரமில்ல. நான் Houston போய்ட்டு உங்கள கூப்பிடறேன். நான் டிசம்பர் 30 கெளம்பறேன். அப்பாவும் அம்மாவும் மறுபடியும் அவன் செய்ய போகும் பயணத்தை நினைத்து பார்க்க விரும்பவில்லை. இவர்கள் இருக்கும் வருடம் 2080. கலாச்சாரங்கள் பெரிதாய் மாறுபட்டுவிடவில்லை, எல்லோரும் எதிர்பார்த்தது போல்.
டிசம்பர் 30. ஆனமட்டும் உலக ஜனங்கள் எல்லோரும் அவர்களுடன் உள்ள தொலைகாட்சியை பார்த்து கொண்டிருந்தார்கள், ரகுவின் அப்பா அம்மா தவிர. காரணம் Voyager பல முறை Nasaவில் தோல்வி அடைந்த, கிடப்பில் போடபட்டு திரும்ப பல முறை எடுக்கபட்ட ஒரு முயற்சி. இந்த முறை கண்டிப்பாய் Marsல் கால் பதிக்கும் சாத்தியம் உண்டு. இதற்கு முன்னால் unmanned mission & animal based missionம் வெற்றி பெற்ற நம்பிக்கை. ஆனால் மொத்தமாய் 4 வருட கால ஆராய்ச்சி. ரகு பூமியின் இலக்கில் இருந்து பல தூரத்தில் இருக்க வேண்டிய கட்டாயம். 10 பேர் அடங்கிய கூட்டணி என்றாலும், போகும் இடம் Mars என்பதால் இத்தனை சிந்தனைகள்.
(பூமியில் இப்போது தேதி, டிசம்பர் 31 2081) ரகு இப்போது இருப்பது Mars. அலட்டிகொள்ளாமல் எல்லோரும் வேலையை பார்த்தார்கள். இவர்களின் ஆராய்ச்சி 5 பூமி மாதங்கள். மனிதனின் உடனடி தேவைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யபட்டு, கன கச்சிதமாக ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. ரகுவின் தேடல் உச்ச கட்ட நிலைக்கு போக, அவனின் ஆராய்ச்சி சொன்ன நிலையை தாண்டி போய்கொண்டிருந்தது. அவனின் ஒரே கோட்பாடு, Mars முன்பே மனித இனம் அல்லது அது போன்ற ஒன்றை கொண்டிருந்தது என்பது தான். இதை விளக்கி சொல்லி பல நேரங்களில் கஷ்டபட்டிருக்கிறான். இப்போது சொல்லாமல் அதற்கான வேலைகளில் இறங்கி விட்டான். Marsல் சுற்றி திரிய சூரிய வெளிச்சத்தை எனர்ஜியாக பயன்படுத்தும் வாகனம் எல்லோருக்கும் கொடுக்கபட்டிருந்தது.
ரகுவின் மனது சொன்னதெல்லாம், முதலில் தண்ணீர் இருக்கும் இடத்தை தேடு, பிறகு மனித இனத்தின் சுவடை தேடலாம் என்பது தான். சுற்றி திரிந்து கண்டுபிடித்துவிட்டான். அங்கே தன் கூட்டாளிகள் இருந்திருக்கவில்லை. அவனுக்கு தண்ணீரின் குணம் சற்றே பயமுறுத்தியது. இதுவரை வரையறுக்கபடாத ஒரு நிறத்தில் இருந்தது. பயத்தின் உணர்வால், தண்ணீரை தொட யோசித்தபடியே, தன் ஆராய்ச்சியின் போது படித்த Mars minerals தன்மை பற்றியெல்லாம் தேவையில்லாமல் யோசித்தபடி, நேரம் ஓடிகொண்டே இருந்ததால், வேறு வழி இல்லாமல் அதை experiment’காக கைகள் படாமல் எடுத்து வைத்த அடுத்த நிமிடம், இடது பக்கத்து காது சுத்தமாய் அடைக்கபட்ட ஒரு உணர்வு.
கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை இழக்கும் நிலை. சில நிமிடங்கள் தான். அவன் இப்போது கண்கள் திறந்தபடிக்கே மயங்கினான். ஆனால், இது எப்போதும் வரும் மயக்கமில்லை. கண் முன் மஞ்சள் வண்ணங்களோ, தலை சுற்றலோ இல்லாத மயக்கம். Mars வேலையை காட்ட ஆரம்பித்து விட்டதோ, ஆனாலும் மூளை எப்போதும் போல் சிந்திப்பதில், மொத்தமாய் குழம்பி போனான். இப்போது அதிலும் நிசப்தம். தன்னுள் ஏதோ ஒன்று இயங்கியது மட்டும் தான் அவன் நினைவில் இப்போது இருப்பது. எப்போதும் நம்பாத அசிங்கமான alien பற்றியெல்லாம் நினைக்க அவன் மூளை இடம் கொடுக்கவில்லை.
கண் மட்டும் இயங்க, இப்போது அவன் முன் எந்த மாற்றமும் இல்லாத ஒரு மனித உருவம். உருவம் மட்டுமே மனிதத்தனமாக இருக்க, தோலின் நிறம் அதே வரையறுக்கபடாத தண்ணீரின் நிறம். பெரிதாய் கிழியாத உதடு. மொத்தமாய் ஒரு சின்ன O. கைகள் சமானமில்லாத நிலை. கால்களும் கைகளும் கீழே ஊனிகொண்டு, சற்றே குரங்கின் வாடிக்கைகள். ரகு எதை எதையோ முடிச்சு போட்டுகொண்டிருந்தான். எண்ணங்கள் ஒரு சீராக இல்லை. ஆனாலும் அதன் சைகைகள் புரிந்து கொள்ளும்படியாக இருப்பது போல் உணர்ந்தான். அது இவன் முன் சிறிது இடைவெளியில் வந்து நின்றபோது, தேவை இல்லாமல் புளித்து போன தோசை மாவின் வாசனை நியாபகம் வந்து தொலைத்தது. அது இவனை தொட முயற்சிப்பது இவனுக்கு புரிந்துவிட்டது. ஓட முயற்சிக்கவில்லை இவன். தொட்ட நிமிடம், தீடீரென சிறு உருவமாக தண்ணீரில் நீந்தும்படிக்கு ரகு மனநிலை. பாதி குழம்பிய அவன், இப்போது முழுதாய் குழம்பி போனான். ஆனால் எங்கோ மூலையில் நான் நினைத்தது சரி என்று அடித்துகொண்டிருந்தது.
இப்போது அது இவனை விட்டு தூரத்தில். பெரிதாய் நகர்ந்துவிட முடியாத நிலை. அப்போது தான், குரல் எழுப்பி இருக்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது. ஆனாலும், அது இவனிடம் எதையோ சைகை காட்டிய லேசான நியாபகம். கையை கீழே முட்டு கொடுத்து எழுந்திருக்கும் போது, உள்ளங்கையில் சில்லிட்டது. அங்கே, மஞ்சளும் சிவப்பும் கலந்த வடிவமில்லா பெரிய கல். அப்படிபட்ட வெப்பநிலையில் கல் சில்லிடுவது வித்தியாசபட்டது. கொஞ்சமும் யோசிக்காமல் எடுத்துவிட்டான். எடுத்தவுடன் தான், scan செய்ய மறந்தது உறைத்தது. இருந்தாலும், என்ன தான் இருக்கிறது என பார்க்க அதில் பல கிறுக்கல்கள்.
(பூமியில் இப்போது தேதி, மே 31 2082) ரகுவுக்கு இப்போது பல பட்டங்கள். Mars மண் தொட்ட சில யுக புருஷ புருஷிகளில் இவனும் ஒருவன். இந்தியாவில் இவன் பெயரில் NH திறந்துவிட்டிருந்தார்கள். ரகுவுக்கு மட்டும் அந்த கல்லின் ஆராய்ச்சி முடிவு பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும் அதன் கிருக்கல்கள்.
3 மாத இடைவெளி. ரகு இப்போது மொத்தமாய் வெளியே விடபட்டான் (Mars கதிர்வீச்சுக்கள் பூமியில் பாய்ந்துவிடாமல் இருக்க, 3 மாத observation period). அப்பா, அம்மாவிற்கு தன் குரலை deliver செய்துவிட்டு, லேபிற்கு ஓடினான். சம்பிரதாயங்கள் முடிக்கபட்டு, அவன் இப்போது கண்ணாடி பெட்டிக்குள் இவன் கண்டெடுத்த கல்லின் முன் நின்று கொண்டிருந்தான்.
இக்பால் அந்த கல்லை உருட்டி புரட்டி கொண்டிருந்தவன். இராக்கில் இருந்து digitial archaeology படித்த award winning விஞ்சானி இவன். ரகுவிற்கு நல்ல நண்பனாகி விட்டிருந்தான். 1 மாததிற்கு பின், ரகுவிற்கு கிடைத்த செய்தி, அந்த கல் இப்போது இருப்பது சென்னையில், ஆராய்ச்சிக்காக.
சென்னை ஆராய்ச்சி மையம். மெலிதாக oxygen கலந்த குளிர் எல்லோர் முகத்திலும் அறைந்து கொண்டிருந்தது. இக்பாலும் ரகுவும் இப்போது ரகுவின் அப்பா முன். ரகுவின் அப்பா அந்த காலத்து தமிழ் ஆராய்ச்சி செய்தவர். கொஞ்சம் கொஞ்சமாய் கல்லின் கிருக்கல்கள் தமிழ் படுத்தபட்டு கொண்டிருந்தன. Oxygen நிரப்பபட்டிருந்த்தும் முவரின் மூச்சு சில நேரங்கள் பெருத்த இடைவெளியில் வந்து கொண்டிருந்தன. மொத்தமாய் இப்போது கல்லின் கிருக்கல்கள் தமிழ்படுத்தபட்டிருந்தது.
“இந்த கிரகத்தின் கடைசி நிமிட பதிவு. இந்த பதிவு எழுதபட்டிருப்பது எங்கள் மொழியில். எழுதியது ஒரு கடைசி உயிரினம். எழுதபட்ட விதம் – எங்களின் விஞ்சான வளர்ச்சியில் உருவான அழியாத எழுத்து பதியும், எதிலும் எழுதும் கருவி. இந்த கிரகம், இப்போது அழிந்து போக போகிறது. சுற்றிலும் இறந்த வாசனைகள்.
நாங்கள் வளர்த்த விஞ்சானம் எங்களை பால்வெளிக்கு அப்பால் பயணிக்க வைத்தது. எங்கள் கிரகத்தை சந்தோஷபடுத்தியது. ஆனால், பின்னாலேயே அதன் அடங்கா கோபம் எங்களுக்கு தெரியவில்லை. இப்போது நாங்கள் உருவாக்கிய விஞ்சானம், எங்கள் வாழ்க்கையில் ஒன்றாகி, இயற்கை குலைத்து, கிரகம் அழிக்கபட்டு விட்டது. கடல் மட்டங்கள் உயர்ந்து அழிந்து கொண்டிருக்கிறோம்.
எங்களின் பல நூற்றாண்டு வாழ்க்கையும், வான்வெளி பயணத்தின் வளர்ச்சியும், பருவ மாற்றங்களும் எங்களை அடுத்த பக்கத்து கிரகங்களை வாழ்வதற்காக பார்க்க வைத்தது. அதன் பலன், எங்கள் ஜீவன்களில் இரண்டு பேர், சுரியனுக்கு மூன்றாவது இடத்தில், எங்களுக்கு பக்கத்தில் இருக்கும் கிரகத்தில் (பால்வெளியில் உயிரினம் வாழ, எங்கள் கிரகத்திற்கு அடுத்து தகுதியான இரண்டாவது கிரகம் அது) கொண்டு போய் விடபட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு நாங்கள் இட்ட பெயர் Adam & Eve“
good one. i liked thr ending.
தோழரே, நல்ல முயர்ச்சி. வாழ்த்துக்கள்.
Enna nanba kathai ellam pinra
Vj
//good one. i liked thr ending.//
Thanks a lot Subbudu.
//தோழரே, நல்ல முயர்ச்சி. வாழ்த்துக்கள்.//
நன்றி!!
//Enna nanba kathai ellam pinra//
chinna oru try thaan. Hope u liked it Vj.