WALL-E

Pixar studios எடுத்திருக்கும் அடுத்த படமிது.

2 வருடங்களுக்கு முன், நான் கலிபோர்னியாவில் இருந்த போது என் அலுவலகம் இருந்த இடம் Pixar studios இருந்த தெருவிற்கு இரண்டாவது தெரு. பஸ்ஸில் போகும் போதெல்லாம், Pixar அனிமேட்டர்கள் பயணம் செய்வது வழக்கம். அப்படி பயணம் செய்த ஒருவர் 2 வருடங்களுக்கு முன் சொன்ன விஷயம், ‘நாங்கள் இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் project பெயர் WALL-E’. கிட்டதட்ட எனக்கு தெரிந்தே 2 வருடங்களுக்கு மேல் உழைக்கபட்ட ஒரு படம்.

படம் ரிலீஸ் ஆன முதல் நாளே (கூட்ட நெரிசலில்லாமல்) பார்த்தேன். தமிழ் பட வாசனை குழைத்த ஒரு அமெரிக்க ஆங்கில (hollywood) படம். மனிதர்களில்லாமல், வரைபடங்கள் சினிமாவாக்கபட்டிருந்தது. புதிதொன்றுமில்லை. ஆனால், பழக்கபட்ட அனிமேஷனை எப்படியாவது ஜனரஞ்கமாக்கபடவேண்டிய அவசியம் இப்போது. முற்காலம் போல், வெறும் சின்ரல்லா வைத்து பிலிம் ஓட்டமுடியாத காலமிது. The Enchanted அப்படி ஒரு படம்தான். ஆனாலும், அதில் real-life vs animation-life வித்தியாசம் காண்பிக்கபட்டது.

Wall-E. கொஞ்சம் கூட குறை சொல்ல முடியாத ஒரு படம். வேண்டிய அளவுக்கு Hollywood மசாலா தெளிக்கபட்டு, ஒழுங்காக வார்த்தெடுக்கபட்டுள்ளது. சமீப காலமாக, சினிமா தீவிர ரசிகனாக இருந்த நானே, பல படங்களை பார்க்க போய் தூங்கி வழிந்தேன் (தசாவதாரம் உள்பட). Wall-E அந்த குறையை கொடுக்கவில்லை. முதல் முப்பது அல்லது நாற்பது நிமிடங்களில் இருந்த மெலிதான தொய்வை தவிர, படம் சரியான விர்ர்ர்ர்.

முதலில் ஒரு இயந்திரத்தை (Robot) பேச வைத்து, அதற்கு மனிதர்களுக்குண்டான பாவங்களை (காதல் கூட விடபடவில்லை) கொடுத்ததெல்லாம், சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால், சின்ன பிள்ளைதனமாக கண்டிப்பாக படும். ஆனால் Pixar வரலாற்றை திரும்பி பார்த்தால், அதற்கு பலமான அஸ்திவாரம் போடபட்டுள்ளது தெரியும். இவர்களின் Toy Story, A Bugs Life, Monsters Inc., Finding Nemo, Cars, Ratatouille எல்லாமே பெரும்பாலும் மனிதர்கள் கம்மியாகவும், non-மனிதர்கள் அதிகமாகவும் வைக்கபட்ட படங்கள் தான். அதில் கைகொடுத்த வெற்றி formula தான் Wall-E.

இதில் (அப்பாவி)ஹீரோ இயந்திரத்தின் பெயர் தான் Wall-E (Waste Allocation Load Lifter Earth-Class). ஹீரோயின் இயந்திரத்தின் பெயர் Eve (Extraterrestrial Vegetation Evaluator). இவர்களுக்கிடையே காதல் மலர்ந்து, பல பல கோள்/வாண்வெளி இடையுறுகளுக்கு மத்தியில் ஒரு சின்ன செடியை (படத்தின் மிக முக்கியமான விஷயம் இந்த செடி. இதன் பின் இன்றைய கால பயங்கரம் கொஞ்சமாக சொல்லபட்டுள்ளது) பூமிக்கு கொண்டுவந்து சேர்க்கும் வேலையை ஜோடியாக செய்து முடிப்பது தான் கதை.

கதை ஒரு வரியாக இருந்தாலும், அதன் திரைக்கதை அசத்தலோ அசத்தல். பூமியில் துவங்கும் கதை, வான்வெளிக்கு பறந்து, அங்கே சில பல action block, romance block, comedy block எல்லாம் போட்டு, மறுபடியும் பூமிக்கே திரும்பி u-turn அடிக்கும் திரைக்கதை.

படத்தை பார்க்கும் போது, சில தமிழ் படங்களின் காட்சிகள் உங்கள் கண் முன் வர ஏகபட்ட சாத்தியங்கள் உண்டு. எனக்கு கண் முன் வந்தது, மூன்றாம் பிறை மற்றும் பல நூறு மசாலா படங்கள்.

2 Replies to “WALL-E”

Comments are closed.