போதும் நிறுத்திக்கலாம்

பெட்டிக்கு வெளியே யோசிங்க(Think-out-of-the-box) என்று பொதுவாக சொல்வார்கள். மாத்தி யோசிங்கப்பா, நீங்க பண்றது எல்லாம் போர் அடிக்குது. அப்படி கண்ணா பிண்ணாவென போர் அடித்த சில…

தொடர் படங்கள் (sequel movie)

இதை யார் தொடங்கி வைத்தார்கள் என தெரியவில்லை. அவர் இருந்தால், தலைவா, போதும் நீ சொன்னதும், இவங்க அத கிண்டி உப்புமா பண்றதும் என சொல்ல தோன்றுகிறது. இந்த வகை, பெரும்பாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம். பாக்ஸ் ஆபிஸில் மில்லியன் மில்லியனாக கொள்முதல் செய்திருக்கிறார்கள். இப்போதும் அப்படி என்று நினைக்கிறார்கள் போல. இத்தனையும் Shrek the Third, Pirates of the carribean (at world’s end) பார்த்தவுடன் தோன்றியது. இவை இரண்டும், அவற்றின் முதல்களை மிஞ்சும் ஆசையுடன் திரைகளில் ஒயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. வந்த புதிதில், மாத்தி யோசித்த படங்கள் இவை. அதற்கு பிறகு, யோசிக்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டார்களோ என்னவோ. போர் அடிக்கவைப்பது, இதற்கு பின் வரும் அனகோன்டா நீளத்துக்கு பெரிய லிஸ்ட். அதில் நிறைய 1,2,3 மேட்டர் தான் (Ocean thirteen, Indian Jones 4, Hellboy 2, Jurassic Park 4, Rush Hour 3…). போதும்பா. (உங்களை பார்த்து சூடு போட்டுக்கொள்ள வேறு ஒரு கூட்டம் பாலிவுட் என்ற பெயரில் இயங்கி வருகிறது. தயவு செய்து நிறுத்தவும்.)

பாலிவுட்

அதிகம் ஹிந்தி படங்கள் பார்த்ததில்லை முன்பெல்லாம். இப்போது, பாதி ஹிந்திவாலா. ஏக் காவ்ன் மேய்ன் ஏக் கிஸான் ரகுதாதா, நிலை இல்லை. ஒரு டைரக்டர், தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வருகிறார். கதை பிடித்திருக்கிறது. தயாரிப்பாளர் சொல்லும் அடுத்த வார்த்தை, இதுல அமிதாப் பச்சன் எந்த கேரக்டர்ல வராரு? கதை எந்த நாட்டுல நடக்குது, யுஸ்ஸா, யுகேவா? இப்படி ஒரு வியாதி அவர்களுக்கு. எல்லா படங்களும் இப்படி இல்லை. ஆனால், பல படங்கள் அப்படித்தான். நிறுத்தினால் நலம்.

விஜய்

யார் மனசுல யாரு? உங்க மனசுல யாரு? இந்த டயலாக் கேட்டாலே, பாலக்காடு பக்கம் ரயிலில் வித் அவுட்டில் போன அதிர்வு. அவரை தமிழில் பேச சொல்லுங்கள், இல்லை, மலையாளத்தில் பேச சொல்லுங்கள். இத்தனைக்கும், அவருடைய மேல் மாடி தகவல்களால் நிரம்பி வழிகிறது. ஆச்சரியம் தான், அலுக்க அலுக்க பாராட்டியாகி விட்டது. ஆனால், இந்த மல்லு தமிழ் கலப்பு, கொஞ்ச காலம் காமெடியாக இருந்து, இப்போது ட்ரேஜிடியாக மாறி விட்டது. விஜய் டிவி கவனித்தால் நலம்.

இப்போதைக்கு மீடியா போர் இவ்வளவு தான். மற்ற போர் எல்லாம், போரடிப்பதால், பிறகு.