புதைத்து வைத்திருந்தேன்
யாராவது வந்து எடுத்துக்கொள்ளுங்கள்
அது என் கவிதைக்குள் தான் இருக்கிறது
பொறுமையாய் தேடுங்கள்
கிடைக்கும்
மிக ஆழமாகவே புதைத்திருக்கிறேன்
கொஞ்சம் சுவாசம் தடைபடலாம்
அவ்வளவு இருட்டுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறேன்
சுலபமில்லை தான்
புதைத்தபோது நானும்
அவஸ்தைப்பட்டேன்
தேடிவிட்டால் சொல்லுங்கள்
நான் புதைத்துவைத்தது
நீங்கள் எடுத்தபோது
எப்படி இருந்தது என்று!!!
காத்திருக்கிறேன்.
யாராவது வந்து எடுத்துக்கொள்ளுங்கள்
அது என் கவிதைக்குள் தான் இருக்கிறது
பொறுமையாய் தேடுங்கள்
கிடைக்கும்
மிக ஆழமாகவே புதைத்திருக்கிறேன்
கொஞ்சம் சுவாசம் தடைபடலாம்
அவ்வளவு இருட்டுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறேன்
சுலபமில்லை தான்
புதைத்தபோது நானும்
அவஸ்தைப்பட்டேன்
தேடிவிட்டால் சொல்லுங்கள்
நான் புதைத்துவைத்தது
நீங்கள் எடுத்தபோது
எப்படி இருந்தது என்று!!!
காத்திருக்கிறேன்.
கவி விதைத்த விதையை தேடினேன்…மூச்சு முட்ட, தேடியது கிடைக்கும் முன் திரும்பிவிட்டேன்…