வீட்டில் வேலையே இல்லை
அலுவல் வேலையும் இல்லை
அலுவல் வேலையும் இல்லை
திரும்பி பார்த்தான்
ஒபாமா பதவி ஏற்றுக்கொண்டிருந்தார்
இன்னும் திரும்பி பார்த்தான்
கருணாநிதியின் கண்கள் பனித்துக் கொண்டிருந்தது
இன்னும் திரும்பி…
பெரியார் காங்கிரசில் இருந்தார்
இன்னும் திரும்பி…
கிழக்கிந்திய கம்பெனி நங்கூரம் பாய்ச்சிக் கொண்டிருந்தான்
இன்னும்…
தூதன் மலைப்பிரசங்கம் செய்து கொண்டிருந்தான்
இன்னும்…
டைனோசர் விண்கல்லை வெறித்து பார்த்து கொண்டிருந்தது
இன்….
பேரண்டத்தின் சிறுகல் பூமியாகிக் கொண்டிருந்தது
வலுக்கட்டாயமாக இன்னும் திரும்பினான்
அவனே நின்று கொண்டிருந்தான்
இல்லாவெளி பெருவெடித்தலுக்கு தயார்
செய்து கொண்டிருந்தான்
கழுத்து வலித்ததால்
திரும்பி வந்துவிட்டான்…
மனம் சும்மா இருக்காது