ஷில்பா ஷெட்டியை முத்தம் வைத்த ரிச்சர்ட் கியரை சொல்லவில்லை. டேய் பற்றிய ஒரு பக்கம் படித்தேன். உலகம் முழுவதும் ஒரே பணம். பாரின் எஸ்சேஞ் அதல பாதாளத்தில் விழுந்து விடும், இது வந்தால். அதிலிருந்த விஷயம் ஒரு பக்கம் கவர்ந்தாலும், பெயர் தூக்கலாக இருக்கிறது. எங்க இருந்து தான் இப்படி எல்லாம் யோசிக்கறாய்ங்களோ.
இப்படி ஒரு விஷயம் சாத்தியம் தானா? வெகு ஜனங்களை அடையாமல், இன்னமும் பரிசோதனை கட்டத்தில், சில பேரின் பேச்சு வார்த்தையில் மட்டுமே இருக்கிறது டேய். 1950ல் யாரும் வருங்காலத்தில் (1999) பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஒரே வகை பண விஷயத்தை பயன்படுத்தும் என நினைத்திருந்திருக்க வாய்ப்பில்லை. அது போல, இது இருக்கும் என திட்டவட்டமாக சொல்ல முடியாது. ஒரு கம்பெனியை இன்னொரு கம்பெனியுடன் இணைப்பதற்கே, வருடகணக்கில் ரூம் போட்டு விவாதிக்கிறார்கள். இது என்ன சாதாரண விஷயமா? இது நடப்பதாக இருந்தால், அந்த நேரத்தில், ராகுல் காந்தியின் பையன், உத்திர பிரதேச காங்கிரஸ் கூட்டத்தில் எதிர் கட்சியின் வாய்க்கு அவல் போட்டு கொண்டிருப்பார். அத்தனை காலம் எடுக்கலாம்.
இது நடந்து விட்டால், இன்று போல் இல்லாமல், விதேசிகள் எக்ஸேஞ் ரேட் முகத்தில் முழிக்காமல் தினம் காலை மனைவி முகம் முழிக்கலாம்.
— படித்ததும் எழுத தோன்றியது, இதன் நம்பகத்தன்மையை ஆராயவில்லை–