இவரை கேள்விபட்டதுண்டா? (எங்கள கேக்கறியே உனக்கு தெரியுமான்னு கேக்கிறது புரியுது) எனக்கும் இன்று தான் தெரிய வந்தது. ஆனால், அவர் இன்று இறந்த செய்தி மூலமாகத்தான்.
பெரும்பாண்மையான நேரங்களில் திரைக்கு பின் இருக்கும் பலர் அந்த இருட்டுடனேயே வாழ்ந்து அதிலேயே இறந்தும் போகிறார்கள். திரையில் தோன்றும் அனைவரும் அதற்கு மாறாக வான்புகழ் அடைகிறார்கள். இவரின் படைப்பு என்னவென்று கேட்கிறீர்களா? டாம் அன்ட் ஜெர்ரி. இதை பார்க்காமல் வளர்ந்த குழந்தை எங்காவது உண்டா? அத்தனை குழந்தைகளின் சந்தோஷத்தையும் இந்த கார்ட்டூன் மூலம் பல மடங்கு அதிகரித்த பெயர் இவருக்கும், William Hanna என்பவருக்கும் மட்டுமே சொந்தம்.
நிலா காண்பித்து சோறு ஊட்டிய காலம் போய், டாம் அன்ட் ஜெர்ரி காட்டி சோறுட்டிய அத்தனை அம்மாக்களும் நன்றி சொல்ல வேண்டிய மகானுபாவர். இத்தனை வயதானாலும், நம்மில் எத்தனை பேர் வரிந்து கட்டி கொண்டு, மடியில் தலைகாணி, இரு கன்னங்களிலும் கைகள், கண்களில் குழந்தைதனம் என்று டாம் அன்ட் ஜெர்ரி பார்க்கிறோம். இன்று கார்ட்டூன் படங்களுக்கு உள்ள மவுசு அதிகரிக்க காரணம் ஒரு வகையில் டாம் அன்ட் ஜெர்ரி வெற்றியும் தான்.
நிஜ மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை, இதையெல்லாம் காட்டும் சினிமாவை விட இந்த கார்ட்டூன் படங்கள் நிச்சயம் ஒரு படி மேல் நிற்பது மறுக்க முடியாத உண்மை. இதை எடுப்பது சாதாரண காரியம் அல்ல. Finding Nemo – Behind the scenes பார்த்த போது தான் தெரிந்தது. இத்தனை உழைப்பா? இதற்கு பின் இத்தனை நுணுக்கமா என்று கண்களையும் மனதையும் ஆச்சரியபடுத்தவே செய்தது. நாம் செய்யும் ப்ரொகிராம் வெட்டி வேலையை விட்டு விட்டு அனிமேஷன் கற்று கொண்டு இந்த துறைக்கு வந்து விடலாமா என்று இன்றைக்கும் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன். ஒவ்வொரு முறை அலுவலகம் செல்லும் போதும் பிக்சார் ஸ்டுடியொஸ் வாசலில் இறங்கி உள்ளே செல்லும் அனைவரையும் பார்க்கும் ஏக்கம் இன்னும் தீர்ந்த பாடில்லை.
உலகத்தின் எந்த மூலையில் குழந்தைகள், டாம் அன்ட் ஜெர்ரி பார்த்து சிரிக்கும் போதும், ஜொசப் பார்பரா ஒரு அகாடமி விருது பெற்று கொண்டு தான் இருப்பார்.
விக்கி தகவல்கள்
2 Replies to “ஜோசப் பார்பரா”
Comments are closed.
ஒன்றுமில்லை: ஜோ பார்பேரா
தங்கள் பின்னூட்டத்திற்கும், linkக்கும் நன்றி பாபா.. 🙂