சடம்

 மனசு சரியில்லை 
என்றான் நண்பன் 
எனக்கும் சரியில்லை 
நேற்று அப்பாவிடம் 
சண்டை 
பணம் குறைவாக
இருக்கிறது என்றான் 
என்னிடமும் இல்லை 
மாதக்கடைசி 
நேற்று பூக்கள் 
சரியாக பூக்கவில்லை 
எனக்கும் தான் 
நாளை எனக்கு கல்யாணம் 
அச்சச்சோ 
எனக்கு முன்பே 
கல்யாணம் ஆகிவிட்டதே 
சொல்வது எதையும் 
எனக்காக 
கேட்காத 
சட சென்மங்கள் 

One Reply to “சடம்”

  1. திறந்தே இருக்கும் செவிகள் நமக்கு மட்டுமே வாய்க்கப்பட்டது போலும்…
    நமக்குரிய காதுகள் நம் மனது மட்டுமே போலும்..
    அருமை..

Comments are closed.