சங்கீத ஸ்வரங்கள், ஏழே கணக்கா, இன்னும் இருக்கா.. என்னவோ மயக்கம்…
என் வீட்டில் இரவு, அங்கே இரவா, இல்ல பகலா.. எனக்கும் மயக்கம்…
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்.. நானும் தான் நெனச்சேன்.. நியாபகம் வரல.. என்னவோ மயக்கம்…
இந்த பாட்டை கேட்கும் போது, இரவில் பேசும் பலரின் நியாபகம் வந்தது. இவர்களில் பலரை கவனித்திருக்கிறேன். அவர்கள் காதலித்து கொண்டிருக்க கூடும், இல்லை, நிச்சயமாகி கல்யாண தேதியை எதிர்பார்த்திருக்க கூடும். ஆய்ந்து ஒய்ந்து பேசி விட்டு, படுக்கையில் சாயும் போது அப்படி ஒரு பெரு மூச்சு. மனது முழுவதும், அந்த இரவை இன்பமாக்கி விட்டவரை நினைத்து கொண்டு, கனவுக்கு தயார் செய்து கொண்டு, கண் மூடுவார்கள்.
சில நேரங்களில், கடும் கோபம் வரும். பல நேரங்களில், சந்தோஷமே மிஞ்சும். அப்படி என்ன தான் பேசுவார்கள்? கண்டிப்பாக, ஜார்ஜ் புஷ் பற்றியோ, அமிதாப் குடியரசு பதவிக்கு பேசப்படுவதை பற்றியோ இருக்காது. இல்லாத வரை சந்தோஷமே. பெரும்பாலும், அடுத்தவரை கிள்ளிவிட்டு, சிணுங்குவதை ரசிப்பார்கள். இல்லை, கொஞ்சம் ego கிளப்பி விட்டு, செல்ல கோபத்தை உருவாக்கி, பின் அதை அணைக்க, காதல் வார்த்தைகள் பேசி நேரத்தை எப்படியாவது கடத்தி விடுவார்கள்.
தகவல் தொடர்பு வளர்ச்சியும், இவர்களின் பேச்சு வளர்ச்சியும் கூடவே செல்லும். நிறைய பேர், பேசுவதற்கு முன் தொலைபேசியை கடவுளாகவும், மாத கடைசியில் அந்த கடவுளை மிக கேவலமாக திட்டுவதும் உண்டு.
ஆனால், அந்த அந்தி சாய்ந்த வேளையில், பிடித்தவரின் குரலை எல்லா மாடுலேஷனிலும் கேட்டுவிட்டு தூங்குவது என்னவோ ஒரு போதை தான். வீழும் வரை வாழட்டும் காதலும் மொபைலும்.

Nanba,
Unakkum kalyanam fix agum,appo nan parthukiren unna.
Ithu vanthu Pammal K Sambandham paduthula Kamal Solra madhiri “Aranchi pakka kodathu,anubhavichu partha than
puriyum”. :->
Vj
athellam fix aagara kaalathula paarthukkalam nanba.
Gud luck to get.feel.njoy the actual gist of the song. 🙂
Adiya – Thanks!
– Lakshman