கோட்டசாமி

கொஞ்சம் நன்றாகவே தமிழ் சினிமா பார்ப்பவராக இருந்தால், உங்கள் பின் மூளையில் கவுண்டமணி என்ட்ரி ஆகியிருப்பார்.

இவரை உலுக்கி உலுக்கி கனவை கலைத்து காமெடி செய்திருப்பார்கள். கனவு மேட்டரை, முடிந்தவரை, இரவை தவிர மற்ற நேரத்தில் கண்டு அதற்கான பின் முன் சைட் விளைவுகளை அவரின் ஸ்டீரியோ குரலால் அலற அலற நகைச்சுவை இருந்திருக்கும்.

உண்மையில் அது பதறடிக்கும் விஷயமே. கண்ணாடியை மூக்கின் நுனியில் வைத்து, சரியாக குளிக்காமல் ஆராய்ச்சி செய்யும் எந்த ஒருவரும் இதை வியாதி தாங்க என்பார்கள். எதனால் இத்தனை பிரச்சினை? அவர்களெல்லாம் ரொம்ப யோசிப்பார்களோ, மூளை என்ற கைப்பிடி மேட்டரை கொஞ்ச நேரமும் ஒய்வெடுக்க விட மாட்டார்களோ? எது எப்படியோ, ஆனால், இவர்களின் வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு அவ்வப்போது வசதி தான். உள்ளே மறைத்து வைத்ததெல்லாம் வாந்தி எடுத்துவிடுவதில் உள்ள மகிழ்ச்சி (எப்போதாவது பக்கத்து வீட்டுகாரம்மா கணவரை கும்மி எடுக்கும் சத்தத்தை கேட்பதில் உள்ள அதே சந்தோஷம் தான்). ஆனால் பெரும்பாலான சமயம், வேண்டாத விருந்தாளி. அனந்தசயனத்தில் இருக்கும்போது பக்கத்தில் இருக்கும் நம்மவர் தீடீரென மேக்-அப் போடாத மனிஷா கொய்ராலாவை பார்த்த பயத்தில் கத்தினால் என்ன செய்ய முடியும். போடா பொடலங்கா என திட்டிவிட்டு மிஸ்டர் அனந்தசயனம் மறுபடியும் எப்போது வருவார் என தேவுடு காக்க வேண்டியது தான். அதிலும் நம்மவர், வேறு பாஷையாய் இருந்தால் பேஷ் பேஷ், ரொம்ப நன்னாயிருக்கும். அர்த்தம் புரியாமல் எதை கேட்டாலும் எரிச்சல் வரும். நடு நிசியில் கேட்டால், வெட்டி போடும் கொலை வெறியே வரும். ஆனால், நீங்கள் ரொம்பவுமே பதவிசான டைப் என்றால், நம்மவரின் கனவு வார்த்தைகளுக்கு செவி கொடுத்து வாயும் கொடுத்து ரொம்ப நல்ல பிள்ளையாக உங்களின் நட்ட நடு இரவை நம்மவருக்கு சமர்ப்பித்து விட்டிருப்பீர்கள்.

இப்போ என்னதான் சொல்ல வர என கேட்பவர்களுக்கு, இந்த கொட்டசாமி சின்ட்ரோம் தாக்கபட்ட ஒரு ஜீவனாக இருந்து விட்ட புண்ணியத்தில், என் அருகில் இருந்தவர்களின் நிலைமையை எப்போதாவது கொட்டிவிட வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதியது இதெல்லாம்.

2 Replies to “கோட்டசாமி”

  1. Fine presentation as usual. But essence missing. Ungal tamil nadaiyil mathrum oru mile kal.

    karu oru vari thaane athukagaa 3 paragraph? konchum over. periya vimarsanam ezhuthaveeNdum enru nenaythen.:-)

  2. நன்றி. சும்மா பதிவென்ற ஆனபிறகு ஒவரெல்லாம் பார்த்தால் முடியுமா.

    வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈஸி பாலிஸி.

    சோ (சோ ராமசாமி இல்லீங்க. ஆங்கில சோ), இலவசமா விட்டுடுங்க.

Comments are closed.