காதல் வரம் நான் வாங்க

…காதல் வரம் நான் வாங்க
கடைகண்கள் நீ வீச
கொக்கை போல நாள்தோறும்
ஒற்றை காலில் நின்றேன்
கண்மணி…

நின்றாய் இங்கு
மின்னல் கீற்றாய்
நித்தம் வாங்கும்
மூச்சு காற்றாய்
உன்னை சூழ்கிறேன்
நான்
உன்னை சூழ்கிறேன்…

இதில், மிர்ச்சி சிவா சுத்தமான அக்மார்க் சொதப்பல் சொதப்பி இருப்பார். வெங்கட் பிரபு சின்ன சின்ன இடங்களில் பாரம்பரிய தமிழ் சினிமா காட்சி காட்டி, முடிந்தவரை சொதப்பி இருப்பார். விஜயலக்ஷ்மி, சொல்றத்துக்கு ஒன்னுமில்லீங். இன்னொரு ரவுண்ட் வந்தால் சுகமாக இருக்கும்.

ரவுண்டு கட்டி அடித்திருப்பது SPB, சித்ரா, யுவன். நேற்றைக்கு காபி வித் அனுவில், தேவன் (ஸ்மையாய் யாய் – கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பார்ட்டி), நரேஷ் அய்யர் (முன்பே வா, என் அன்பே வா), சுபிக்ஷா (கண்ட நாள் முதலாய்) அன்ட் மதுமிதா (கனா காணும் காலங்கள்) வந்து டிக்காஷன் போடாத காபி குடித்து அனுவிடம் அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள். இன்னமும் நீங்க சாதிக்கனுமப்பு. நிறைய பெரியவங்க பேசுறத கேளுங்க. சுபிக்ஷா பாந்தமாய் இருப்பதால், அவருக்கு மட்டும் எக்ஸெப்ஷன்.