கலைக்கடவுள்கள்

சிறுகதையின் கடவுளும்
கவிதையின் கடவுளும்
அந்த ஒருவனுக்கு
சண்டை போட்டனர்
வானத்தில் குருதி பறந்தது
குருதிக்குள்ளும்
சின்னஞ்சிறு கவிதைகள்
குட்டிக்குட்டி கதைகள்
சேதாரங்கள் இல்லை
ஆனால் அவனுக்கு குழப்பம்
யாரிடம் அடைக்கலம் புகுவது
இருவரும் அன்பையும்
மென்மையான வாழ்வையும்
அளித்துக்கொண்டே இருக்கின்றனர்
குழம்பிய மகனிடம்
தாய் சொன்னாள்
நானே உன் தாய்
நானே உன் கடவுள்
கதைகளையும் கவிதைகளையும்
என்னை வைத்துப் படை
இரு கடவுள்களும் ஒதுங்கி
என்னை தொழுவார்கள்