தேர்தல்…

எங்கெங்கும் தேர்தல் வாசனை
முடிந்தவரை சுவர்களில்
வெள்ளுடைகள் அடங்கிய
சுவரொட்டிகள்…

தெரு முக்கிலெல்லாம்
கைகூப்பி நிற்கிறார்கள்…

தொலைபேசியில் அழைத்து
குசலம் விசாரித்து
கூப்பாடு போடுகிறார்கள்…

எப்பாடு பட்டினும்
வாக்களித்து விடுங்கள்..
இல்லையேல்,
மறுபடியும் பேச
ஆரம்பித்து விடுவார்கள்…
இன்னொரு ஈழம்
கிடைக்காதாவென
தேட ஆரம்பித்துவிடுவார்கள்…

49-0 எல்லாம் வேண்டாம்
எந்த பட்டனை
அழுத்தினாலும் விடை
ஒன்று தான்…