பேசி விடாதீர்கள்
எனக்கு மூச்சு முட்டுகிறது
எங்கெங்கு காணினும் செந்நிற ஓநாய்
அதை காணாத கண்கள்
ஆனாலும் பாரெங்கும்
ரத்தமாய் உறைந்துள்ளது
ஒரே கோரிக்கை
இதற்கு காரணம்
நீங்களில்லை
நானில்லை
இப்போதைக்கு அந்த ஓநாய்க்கு
வாழ்நாள் பசி
புசித்துவிட்டு போகட்டும்
கொடிய பற்களால்
நாராய் கிழித்தெடுக்கப்பட்ட
தசையின் வழியே
மீண்டும் பிறந்தே தீரும்
அதே ஓநாயின் தலைக்கு மேல்
பட்டாம்பூச்சி குருவியாய்
காற்றை புசித்து
எச்சமிடும் மிச்சமிருக்கும்
அன்பு
எனக்கு மூச்சு முட்டுகிறது
எங்கெங்கு காணினும் செந்நிற ஓநாய்
அதை காணாத கண்கள்
ஆனாலும் பாரெங்கும்
ரத்தமாய் உறைந்துள்ளது
ஒரே கோரிக்கை
இதற்கு காரணம்
நீங்களில்லை
நானில்லை
இப்போதைக்கு அந்த ஓநாய்க்கு
வாழ்நாள் பசி
புசித்துவிட்டு போகட்டும்
கொடிய பற்களால்
நாராய் கிழித்தெடுக்கப்பட்ட
தசையின் வழியே
மீண்டும் பிறந்தே தீரும்
அதே ஓநாயின் தலைக்கு மேல்
பட்டாம்பூச்சி குருவியாய்
காற்றை புசித்து
எச்சமிடும் மிச்சமிருக்கும்
அன்பு